ஆம்பூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல் :

ஆம்பூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல் :
Updated on
1 min read

ஆம்பூர் அருகே விண்ணமங்கலம், மின்னூர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது.

விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மழை நீருடன் கழிவுநீர் கலந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. மேலும், தாழ்வான இடங்களில் கழிவுநீர் சென்று சூழ்ந்ததால் அப்பகுதியினர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள ராஜாஜி வீதி, அன்னை தெரசா வீதி உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது.

இந்நிலையில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததால் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதில் 3 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்களை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதனால் அப்பகுதியினர் தங்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரி சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் .

தகவலறிந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதியினருடன் பேச்சுவார்த்தை நடத் தினர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதன் காரணமாக விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இருப்பினும், அப்பகுதியினர் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு பொதுமக்கள் சமரசம் அடைந்து தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in