Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் - 22 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை :

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் 22 மையங்களில் இன்று உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக 13 ஊராட்சி ஒன்றியங்களில் 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 688 ஊராட்சிமன்றத் தலைவர்கள், 5,088 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 6,097 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் கடந்த 6-ம் தேதி செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 83.66 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இரண்டாம் கட்டமாக கடந்த 9-ம் தேதி காணை, கோலியனூர், மரக்காணம், வல்லம், மேல்மலையனூர், மயிலம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 85.34 சதவீதம் வாக்குகள் பதிவானது.

காணை ஒன்றியத்திற்கு விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியிலும், கோலியனூர் ஒன்றியத்திற்கு விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மயிலம் ஒன்றியத்திற்கு கொல்லியங்குணம் பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், மேல்மலையனூர் ஒன்றியத்திற்கு மேல்மலையனூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், மரக்காணம் ஒன்றியத்திற்கு மரக்காணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வல்லம் ஒன்றியத்திற்கு களையூர் ராஜா தேசிங்கு பாலிடெக்னிக் கல்லூரியிலும், செஞ்சி ஒன்றியத்திற்கு மேல்கலவாய் டேனி கல்வியியல் கல்லூரி மற்றும் டேனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், முகையூர் ஒன்றியத்திற்கு அரகண்டநல்லூர்  லஷ்மி வித்யாஷ்ரம் பள்ளியிலும், கண்டமங்கலம் ஒன்றியத்திற்கு கெங்கராம்பாளையம் ஐஎப்இடி பொறியியல் கல்லூரியிலும், விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு முண்டியம்பாக்கம் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், ஒலக்கூர் ஒன்றியத்திற்கு திண்டிவனம் அண்ணா பொறியியல் கல்லூரியிலும், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்கு திருவெண்ணெய்நல்லூர் காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளியிலும், வானூர் ஒன்றியத்திற்கு ஆகாசம்பட்டு  அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அனைத்தும் நாளை அதிகாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில், "வாக்கு எண்ணும் மையங்களில் 1,318 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்குஎண்ணிக்கை பணிகளில் 5,605 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர்" என்றார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருகட்டங்களாக 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 180 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 412 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

இதில் முதற்கட்டமாக திருக்கோவிலூர், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 10 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 89 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 217 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் 1,608 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 82.25 சதவீத வாக்குகள் பதிவானது.

2-ம் கட்டமாக கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம் மற்றும் கல்வராயன்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 9 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 91 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 195 ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் 1,554 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. 2-ம் கட்ட வாக்குப் பதிவில் 82.6 சதவீத வாக்குகள் பதிவானது.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதன்படி திருக்கோவிலூர் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, திருநாவலூர் அன்னை தெரசா பொறியியல் கல்லூரி, உளுந்தூர்பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி,கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் மேலூர் டிஎஸ்எம் ஜெயின்பொறியியல் கல்லூரி, சின்ன சேலம் ஒன்றியத்தில் வாசுதே வனூர் மகாபாரதி பொறியியல் கல்லூரி, சங்கராபுரம் அரசு தொழில்நுட்ப கல்லூரி, தியாக துருகம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும்கல்வராயன்மலை ஒன்றியத்தில் வெள்ளிமலை ஏகலைவா மாதிரி மேல்நிலைப்| பள்ளியிலும் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்குஎண்ணும் பணியில் மொத்தம் 3,810பணியாளர்கள் ஈடுபடுத் தப்படவுள்ளனர். ஒவ்வொரு மையத்திலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் வட்டாரபார்வையாளரும், 6 நுண்பார்வையாளர்களும் பணிகளை கண்காணிப்பார்கள். மாவட்டத்தில்67 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x