

ராமநாதபுரம் அருகே மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அச்சுந்தன்வயல் சோதனைச்சாவடியில் நேற்று மாலை நகர் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிறிய சரக்கு லாரி நிற்காமல் சென்றதை அடுத்து லாரியை துரத்தி பிடித்தனர். அதிலிருந்த ஒருவர் இறங்கி ஓடிவிட்டார். லாரியில் இருந்த 2,400 கிலோ மஞ்சளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், இலங்கைக்கு கடத்திச் செல்ல ஈரோட்டில் இருந்து ராமநாதபுரத்துக்கு மஞ்சள் கொண்டு வந்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ராமநாதபுரம் அருகேயுள்ள மேலக்கோட்டையைச் சேர்ந்த அன்வரை போலீஸார் தேடி வருகின்றனர்.