Published : 12 Oct 2021 03:14 AM
Last Updated : 12 Oct 2021 03:14 AM
இவ்விழாவில் கஜா புயல் முதல் கரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களை தேடிச் சென்று பல்வேறு உதவிகள் புரிந்த, காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், திமுக பிரமுகருமான கேவிஎஸ் சீனிவாசனின் சேவையை அங்கீகரித்து, சர்வதேச தமிழ்ப்பல்கலைக் கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் (டாக்டர்), அறக்கட்டளை சார்பில் சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது. டாக்டர் பட்டம் மற்றும் விருதினை, இந்திய விண்வெளி ஆய்வு மையம் முன்னாள் திட்ட இயக்குநர் பத்ம டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, கேவிஎஸ் சீனிவாசனுக்கு வழங்கினார்.
இதே போல் சேவா ரத்னா விருதுகள் கேவிஎஸ் குழுமத்தை சேர்ந்த தணிகாசலம், சுப்பிரமணி, சுவாமிநாதன், கற்பூரசிவன் மற்றும் சிறந்த சேவைக்கான விருதுகள் ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் அசேனுல்லா, சந்தோஷ்குமார் மற்றும் பலர் செய்திருந்தனர். மாவட்ட பொருளாளர் ஆரிப் நன்றி கூறினார். விழாவினை நடிகர் ஹரிபாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT