குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது  :

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது :

Published on

தூத்துக்குடி அருகேயுள்ள திம்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மா.பிரம்மராஜன் (55). நாட்டுப்புறக் கலைஞரான இவர், கந்துவட்டி கொடுமை காரணமாக கடந்த 13.09.2021 அன்று தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தட்டப்பாறை போலீஸார் வழக்கு பதிவு செய்து வைகுண்டம் கீழ கோட்டைவாசல் தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் (45) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல் செய்துங்க நல்லூர் மேல தூதுகுழி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் உய்காட்டன் (23) என்பவரை கொலை முயற்சி வழக்கில் செய்துங்கநல்லூர் போலீஸார் கடந்த 20.09.2021 அன்று கைது செய்தனர். இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரைத்தார். ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவின் பேரில் இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in