எஸ்.எஸ்.சி. தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் :

எஸ்.எஸ்.சி. தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் :
Updated on
1 min read

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எஸ்.எஸ்.சி. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பில் சேர பதிவு செய்துகொள்ளலாம் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் சார்பில் பல்நோக்கு பணியாளர், பெண்கள் படை பயிற்சிவிப்பாளர், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட 3,261 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற தளத்தில் விண்ணப்பித்த இளைஞர்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன.

இதில், பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் அல்லது 0416-2290042 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in