Published : 11 Oct 2021 03:13 AM
Last Updated : 11 Oct 2021 03:13 AM

இரண்டு கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 82% வாக்குப்பதிவு :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருகட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 82 சதவீதம் வாக்குகள் பதிவாகி யிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக் டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது. அமைதியாக நடைபெற்ற இத்தேர்தலில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-ம் கட்ட வாக்குப் பதிவில் 82.6 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதையடுத்து வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அன்று இரவே (அக். 9) போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.

அதன்படி கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலூர் டிஎஸ்எம் ஜெயின் பொறியியல் கல்லூரியிலும், சின்னசேலம் ஒன்றியத்திற்குட்பட்ட வாசுதேவ னூர் மகாபாரதி பொறியியல் கல்லூரியிலும், சங்கராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபு ரம் அரசு தொழில்நுட்ப கல்லூரியிலும், தியாகதுருகம் ஒன்றியத் திற்குட்பட்ட தியாகதுருகம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மற்றும் கல்வரா யன்மலை ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளிமலை ஏகலைவா மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள வாக்குப்பெட்டிகளுக்கான பாதுகாப்பு அறையின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் தொடர்ந்து கண்காணித்திட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கியேந்திய போலீஸார் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருகட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில் சராசரியாக 82சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப் பதாக மாவட்ட நிர்வாகம் தெரி வித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x