சோழதரம் அருகே - மழையால் 150 ஏக்கர் நெல் நாற்றுகள் சேதம் : விவசாயிகள் வேதனை

சோழதரம் அருகே நந்தீஸ்வரமங்கலத்தில் சம்பா நடவு செய்யப்பட்ட நெல் வயலில் மழை தண்ணீர் தேங்கி நாற்று அழுகியுள்ளதை காட்டும் விவசாயிகள்.
சோழதரம் அருகே நந்தீஸ்வரமங்கலத்தில் சம்பா நடவு செய்யப்பட்ட நெல் வயலில் மழை தண்ணீர் தேங்கி நாற்று அழுகியுள்ளதை காட்டும் விவசாயிகள்.
Updated on
1 min read

சோழதரம் அருகே 150 ஏக்கர் சம்பா நடவு மழையால் சேதம் அடைந்தது.

சோழதரம் அருகே உள்ள வலசக்காடு,நந்தீஸ்வரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் தற்போது சம்பா நடவு பணிகளை செய்து வருகின் றனர். இந்த நிலையில் கடந்த சிலநாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் மழைத் தண்ணீர் வயலில் தேங்கியுள்ளது. சம்பா நடவு செய்து ஐந்து நாட்களேயான நெல் நாற்றுக்கள் தண்ணீரில் மூழ்கி அழுகியுள்ளன. வயலில் தேங்கியுள்ள மழைத் தண்ணீரை வடிய வைக்க வழியில்லாமல் உள்ளனர். இதனால் இப்பகுதியில் சுமார் 150 ஏக்கருக்குமேல் மழைத்தண்ணீரில் மூழ்கி நெல் நாற்று நடவு சேதமடைந்துள்ளது. நட்ட பயிர் அழுகிப்போயிருப்பதால் விவசாயிகள் கவலை அடைந் துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், "ஒரு ஏக்க ருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரைகடன் வாங்கி செலவு செய்துள் ளோம். மழை நீர் தேங்கியதால் நட்ட நாற்று அழுகிவிட்டது.எங்களுக்கு அரசு இழப்பீட்டு வழங்க வேண்டும். இப்பகுதியில் உள்ள பாசன, வடிகால் வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரிட வேண்டும், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in