

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே 97 வயது மூதாட்டி ஒருவர் தீ விபத்தில் உயிரிழந்தார்.
வெம்பக்கோட்டை அருகே உள்ள குறிச்சியார்பட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணசாமி மனைவி சுப்புலட்சுமி (97). தனது மகன் அய்யலுசாமியின் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 5-ம் தேதி குளிப்பதற்காக வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் அடுப்பில் வெந்நீர் வைத்துள்ளார். அடுப்பிலிருந்து அதை இறக்க முயன்றபோது சேலையில் தீப்பற்றி சுப்புலட்சுமி படுகாயமடைந்தார். ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி உயிரிழந்தார். கீழராஜ குலராமன் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.