Published : 11 Oct 2021 03:13 AM
Last Updated : 11 Oct 2021 03:13 AM

பெண்ணிடம் கிண்டல், கணவர் மீது தாக்குதல் - காரைக்குடியில் 5 கல்லூரி மாணவர்கள் கைது :

காரைக்குடியில் உள்ள உணவ கத்தில் பெண்ணை கேலி செய்து, கணவரை தாக்கி ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர் தேவ கோட்டை கைலாசநாதபுரத்தைச் சேர்ந்த அசோக் கோபிநாத் (19). இவர் சமீபத்தில் புதிதாக பைக் வாங்கினார். இதற்காக தனது நண்பர்களுக்கு 100 அடி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் அக்.8-ம் தேதி மதியம் விருந்தளித்தார். அப்போது உணவகத்தில் பார்சல் வாங்க இளம் தம்பதி வந்தனர். மனைவியை வெளியே நிற்க வைத்துவிட்டு, கணவர் பார்சல் வாங்க உள்ளே சென்றிருந்தார். கல்லூரி மாணவர் காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த முகமது சல்மான்கான் (20), பெண்ணின் தலையில் இருந்த பூவை பறித்து கேலி செய்தார்.

மாணவர்களை பெண்ணின் கணவர் தட்டிக் கேட்டார். இதையடுத்து ஹோட்டலில் இருந்த பொருட்களை எடுத்து கணவரை மாணவர்கள் சரமாரியாகத் தாக்கினர். அவர்களை தடுக்க முயன்ற ஹோட்டல் ஊழியர் அந் தோணிசாமியையும் மாணவர்கள் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து கணவரும், மனைவியும் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், தகராறின்போது ஹோட்டலில் மாணவர்கள் சிலர், தங்களின் மொபைல்போன்களை விட்டுச்சென்று விட்டனர். அதைக் கேட்டால் ஹோட்டல் உரிமையாளர் தரமாட்டார் எனக் கருதிய மாணவர்கள், இது தொடர்பாக அழகப்பாபுரம் போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர்.

அப்போது, ஹோட்டலுக்குச் சென்றபோது மொபைல் போன்களை வைத்துவிட்டு வந்துவிட்டோம். அதை ஹோட்டல் உரிமையாளரி டமிருந்து மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஹோட்டல் உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, மாணவர்கள் ஹோட்டலில் செய்த ரகளையை சிசிடிவி கேமரா காட்சிகள் ஆதாரத்துடன் உரிமை யாளர் போலீஸாரிடம் கொடுத்தார்.

இதையடுத்து போலீஸார், ஹோட்டலில் ரகளை செய்ததாக வழக்குப் பதிவு செய்து, 5 மாணவர்களை கைது செய்தனர். மேலும் 7 மாணவர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x