பூங்கா, அணைகளை பார்வையிட தடை நீட்டிப்பு :

பூங்கா, அணைகளை பார்வையிட தடை நீட்டிப்பு  :
Updated on
1 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பொழுது போக்கு பூங்காக்கள் மற்றும் அணைகளை பார்வையிடுவதற்கான தடை உத்தரவை வரும் 17-ம் தேதி வரை நீட்டித்து ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுப்பதாக கூறி, அணைகள் மற்றும் பொழுது போக்கு பூங்காக்களை பார்வையிட பொதுமக்களுக்கு கடந்த 2 மாதங்களாக மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து வருகிறது. இந்த தடை உத்தரவு, மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்பதால் பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் அணைகளை பார்வையிடுவதற்கு அக்டோபர் 10-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு, வரும் 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in