

தி.மலை மாவட்டம் ஆரணி நகரம் காந்தி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் திலிப்சிங் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடையில் இருந்த சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள செல்போன் மற்றும் உதிரிபாகங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.