ஊர்க்காவல் படையில் பணியாற்ற அழைப்பு :

ஊர்க்காவல் படையில் பணியாற்ற அழைப்பு :
Updated on
1 min read

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி மற்றும்மண்டல துணை தளபதி பதவிகளுக்கு பணிநியமனம் செய்யப்பட உள்ளது. மேலும், காவல்துறைக்கு உதவியாக ஊர்க்காவல்படையில் இணைந்து சேவை செய்ய தகுதியுள்ளோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 20 வயது முதல் 45 வயதுக்குள்ளான உடற்தகுதி உடைய ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம் மற்றும் உடுமலைஆகிய உட்கோட்டங்களில் உள்ளஊர்க்காவல்படை அலுவலகங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்கான சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்பஅட்டை நகல்இணைக்கப்படவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் ஊர்க்காவல்படை அலுவலகத்திலோ அல்லதுஉட்கோட்டங்களில் உள்ளஊர்க்காவல்படை அலுவலகங்களிலோ நவம்பர் 1-ம் தேதி மாலை 5 வரை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in