

நாகர்கோவிலை அடுத்த பழவிளை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்துவைத்தார்.
இதைத்தொடர்ந்து பழவிளை காமராஜ் தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய சேவை திட்டத்தின் கீழ் 1,000 பனை விதை நடும் நிகழ்வையும் அமைச்சர் தொடக்கி வைத்தார்.