

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே செங்கமங்கலம் கிராமத் தைச் சேர்ந்த பழனிவேல்- தன லட்சுமி தம்பதியின் மகன் அஜித்(26). இவரது பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், தனலட்சுமியின் தாய் செல்லம் மாள்(92), அஜித்தை வளர்ந்து வந்தார். வாதநோயால் பாதிக்கப் பட்ட செல்லம்மாளை, அஜித் சிறு வயதில் இருந்தே கூலி வேலை செய்து காப்பாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் வீட்டுக்குள் செல்லம்மாள் எரிந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். தகவலறிந்து வந்த பேராவூரணி போலீஸார், பேரன் அஜித்திடம் சந்தேகத்தின்பேரில் விசாரிக்கின் றனர்.