திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை பணிகளை விரைவாக முடிக்க கோரிக்கை  :

திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை பணிகளை விரைவாக முடிக்க கோரிக்கை :

Published on

பிரதமர் மோடிக்கு, சைமா சங்க தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன்நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிரதமரால் கடந்த 2019-ம் ஆண்டு பிப். 10-ம் தேதி, திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமரால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் விரைவாக முடிக்கப்படும் என ஆவலுடன், திருப்பூர் நகரமே காத்திருக்கிறது. ஆனால் இன்னமும் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கப்படவில்லை. இ.எஸ்.ஐ. மருத்துவமனை பணிகளை விரைவாக தொடங்கி, இ.எஸ்.ஐ. மருத்துவமனையை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in