விழுப்புரம் அருகே - சகோதரரை கொன்றவருக்கு ஆயுள் சிறை தண்டனை :

விழுப்புரம் அருகே -  சகோதரரை கொன்றவருக்கு ஆயுள் சிறை தண்டனை :
Updated on
1 min read

விழுப்புரம் அருகே கெங்கரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (50). இவரது சகோதரர் அசோகன் (55). சொத்தை பிரித்து தருமாறு தம்பி ஆனந்தன் கேட்டு வந்தார். ஆனால், அண்ணன் அசோகன் சொத்தை பிரிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இருவருக்கும் இடையே சொத்து தொடர்பாக கடந்த 7.9.2019-ல் தகராறு ஏற் பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஆனந்தன் அசோகனை தாக் கினார். பலத்த காயமடைந்த அசோகன் உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து

ஆனந்தனை கைது செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன் நேற்று ஆனந்தனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

சொத்தை பிரித்து தருமாறு தம்பி ஆனந்தன் கேட்டு வந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in