தீபாவளிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் :  அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

தீபாவளிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

Published on

பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. இங்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிரவனை ஆதரித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் அரியக்குடி, புத்தூர், போகலூர், சத்திரக்குடி ஆகிய பகுதிகளில் நேற்று இறுதிகட்ட வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தீபாவளிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றார். அதேபோல் அதிமுக வேட்பாளர் மாரியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அரியனேந்தல், போகலூர், அரியகுடி, புத்தூர், சத்திரக்குடி, முதலூர் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in