

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சித்தார்பட்டியைச் சேர்ந்தவர் சக்திகுமரவேல். குடும்பத்துடன் குருவம்மாள்புரம் கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். இவரது மகன் ரிஷிகேசவன்(12) விளையாடச் சென்றவர் வெகுநேரமாக காணவில்லை. குரும்பபட்டி அருகே உள்ள குவாரி பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் ரிஷிகேசவன் உடல் மிதப்பதாக அவ்வழியே சென்றவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் உடலை மீட்ட க.விலக்கு போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.