

வாகன ஓட்டிகளிடம் மன அமைதியை ஏற்படுத்துவதற் காக திருச்சி மாநகர சாலைகளி லுள்ள சிக்னல்களில் திரைப்பட பாடல்களின் இன்னிசை ஒலி பரப்பு செய்யப்படுகிறது.
திருச்சி மாநகரில் வாகனப் பெருக்கத்துக்கேற்ப சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட வில்லை. இதனால் பெரும்பா லான சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படு வதும், சிக்னல்களில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படு கிறது.
இதுபோன்ற நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு பதற் றம், தேவையற்ற எரிச்சல் ஏற்படுவதை மாற்றவும், அவர்களுக்குள் மன அமை தியை ஏற்படுத்தும் வகை யிலும் திரைப்பட பாடல் களின் இன்னிசையை ஒலி பரப்ப நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸாருக்கு மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் முதற்கட்டமாக தலைமை தபால் நிலையம், ஒத்தக்கடை, மேஜர் சரவணன் ரவுண்டானா, சாஸ்திரி சாலை சந்திப்பு, அரியமங்கலம் பழைய பால்பண்ணை ரவுண்டானா உள்ளிட்ட இடங்களிலுள்ள சிக்னல்களில் தற்போது ஒலிப் பெருக்கி மூலம் இன்னிசை ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகர போலீ ஸார் கூறும்போது, ‘‘இருசக்கர வாகனங்களில் செல்லும் போது வீட்டுச் சூழல், பணியிடம் உள் ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலானோர் மன உளைச் சல் அல்லது விரைந்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்தி லேயே பயணம் செய்கின்றனர்.
இதனால் விபத்துகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புண்டு. எனவே சிக்னல்களில் காத்திருக் கும் நேரத்தில் அவர்களிடத் தில் பாடல் இசை மூலம் மன அமைதியை ஏற்படுத்துவதற் கான முயற்சியை மேற்கொண் டுள்ளோம். இதற்கு வாகன ஓட்டிகளிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே மாநகரிலுள்ள அனைத்து சிக் னல்களிலும் இதை செயல் படுத்த நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது’’ என்றனர்.