

திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் மற்றும் புதுநகர் திட்டப் பகுதிகளில் கோவை வீட்டு வசதி பிரிவின் மூலம், முழுத்தொகை செலுத்திய ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்களுக்கு கிரையப் பத்திரம் வழங்கும் முகாம் இன்று (அக்.10) நடைபெறுகிறது.
திருப்பூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தின் குறைதீர் கூட்ட அரங்கில் நேற்று நடந்த நிகழ்வில் 10 பேர், முழுத் தொகை செலுத்திய நிலையில் அவர்களுக்கான கிரையப்பத்திரம் வழங்கப்பட்டது.
அதேபோல் இன்று நடைபெறும் முகாமில், சம்பந்தப்பட்ட ஒதுக்கீடுதாரர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கோவை வீட்டு வசதிப்பிரிவு அதிகாரிகள் செய்திருந்தனர்.