

பரங்கிப்பேட்டை அருகே உள்ள சாமியார்பேட்டை கடற்கரை பகுதி யில் நேற்று காலை மீனவர்கள் வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மின்னல் தாக்கி பாலகிருஷ் ணன் (56) படுகாயம் அடைந்தார். மேலும் குப்புசாமி மகன் ராமலிங் கம் என்பவருக்கு காதின் செவித் திறன் பாதிக்கப்பட்டது.
இடி சத்தத்தால் காளியப்பன், பொன்னம்பலம், நடுமன், குட்டி யாண்டி, செந்தில், காந்தி, வடிவேல்,நரேஷ், மூர்த்தி, மோகன், ராஜதுரை, ரமேஷ், நாகராஜ், ராமசாமி, சக்தி வேல், கார்த்தி ஆகிய 16 பேர் அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற புதுச் சத்திரம் போலீஸார் மற்றும் ஊர் மக்கள் இவர்கள் அனைவரையும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத் துவமனையில் பால கிருஷ்ணன் உயிரிழந்தார். மற்ற 17 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.