ஜோலார்பேட்டை, கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு - ரயில் பாதை அமைக்க ஓய்வூதியர்கள் கோரிக்கை :

ஜோலார்பேட்டை, கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு -  ரயில் பாதை அமைக்க ஓய்வூதியர்கள் கோரிக்கை :
Updated on
1 min read

ஜோலார்பேட்டை, கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் 5-ம் ஆண்டு விழா கிருஷ்ணகிரியில் நடந்தது. மாவட்டத் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். ஐவிடிபி தொண்டு நிறுவன நிறுவனர் குழந்தை பிரான்சிஸ், ஓய்வு பெற்ற 80 வயது நிரம்பிய உறுப்பினர்கள் 5 பேருக்கு தங்க நாணயம் வழங்கினார். காலம் சென்ற உறுப்பினர்களின் 8 குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மருத்துவர் சிவகுமார், உடல்நலம், தொடர்பான ஆலோசனைகள் வழங்கினார்.

நகைச்சுவை என்கிற தலைப்பில் லக்ஷ்மி நாராயணன் பேசினார். தருமபுரி மாவட்ட முன்னாள் வருவாய் அலுவலர் கோபால், விழா மலரை வெளியிட, நிர்வாகி தங்கராஜ் பெற்றுக் கொண்டார். சேலம் மாவட்ட தலைவர் குணசேகரன், நாமக்கல் மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் மாநில தலைவர் செல்வராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

ஜோலார்பேட்டை கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும். ஓய்வூதியர்களின் இறப்புக்கு பிறகு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in