கிணற்றுக்குள் தவறி விழுந்தவர் மீட்பு :

கிணற்றுக்குள் தவறி விழுந்தவர் மீட்பு :
Updated on
1 min read

பல்லடம் அருகே கவுண்டம்பாளையம்புதூரில் வசித்து வருபவர் ராகேஷ்(25). வடமாநிலத்தை சேர்ந்த பின்னலாடைத் தொழிலாளி. நேற்று முன் தினம் இரவு செல்போனில் பேசியபடி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சுமார் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். தகவலின்பேரில் அங்கு சென்ற பல்லடம் தீயணைப்பு வீரர்கள், பல மணி நேர போராட்டத்துக்குப்பின் ராகேஷை மீட்டனர்.

ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in