

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சு.வினீத் தலைமையில் நேற்று நடந்தது.
இதில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்துள்ளதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் பயிர்க்கடன் பெறும்போது வழங்கப்பட்ட அடங்கலில், பயிர் தொடர்புடைய குறிப்புகள் சரியாக இல்லாததால் முழு கடன் தள்ளுபடி வழங்க முடியாது என்று கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் ஈரோடு, கோவை மாவட்டங்களில் கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை வழங்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலும் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி சான்றிதழையும், நகைகளையும் உடனே வழங்க வேண்டும். புதிய கடன்கள் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என குறிப்பிட்டுள்ளனர்.
நீலகிரி