

திருப்பூர்:திருப்பூர் குமரன் சிலை அருகே டீசா தொழில் அமைப்பு (ஏற்றுமதி பணியாளர்கள் சங்கம்) சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். திருப்பூரில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள விரிவுபடுத்தப்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம், மக்கள் நீதி மய்யம் தொழிற்சங்கமாநில துணைத்தலைவர் சுதன், ஏஐடியுசி பின்னலாடை சங்க பொதுச்செயலாளர் சேகர்,நாம் தமிழர் கட்சி தொழில் அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.