வாக்குரிமை விற்பனைக்கு அல்ல திருநாவலூரில் விழிப்புணர்வு பிரச்சாரம் :

திருநாவலூர் கிராமத்தில் வாக்களிக்க பணம் கொடுக்கு வீட்டுக்கு வராதே என்ற வாசகங்களுடன் கூடிய பதாகை ஏந்தி நிற்கும் தங்கராசு குடும்பத்தினர்.
திருநாவலூர் கிராமத்தில் வாக்களிக்க பணம் கொடுக்கு வீட்டுக்கு வராதே என்ற வாசகங்களுடன் கூடிய பதாகை ஏந்தி நிற்கும் தங்கராசு குடும்பத்தினர்.
Updated on
1 min read

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை மறுதினம் நடைபெற உள்ளநிலையில், உள்ளாட்சி அமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் இறுதிக் கட்டப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு கிராமத்திலும் வாக்கை உறுதி செய்யும் வகை யில், வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களை திரட்டி ஒரிடத்தில் ஒருங்கிணைத்து வாக்களிக்கும் விதம் குறித்து எடுத்துரைத்து வருகின்றனர். மேலும் ஆண் வாக்காளர்களுக்கு உற்சாக பானங்களும், பெண்களுக்கு பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை கொடுத்து கவரும் உத்திகளும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது.

இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி யில், தங்கராசு குடும்பத்தினர் எங்கள் உரிமைகளை விலை பேசவேண்டாம். தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுக்க வீட்டுக்கு வராதே.ஜனநாயக முறையில் தேர்தலை நடத்துவோம் என்ற வாசகங்கள் பொருந்திய பதாகைகளை ஏந்தி, கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயலில் இறங்கி யுள்ளனர். இவரது செயலுக்கு கிராமத்தில் சிலர் வரவேற்பு அளித்தாலும், பெரும்பாலானோர் அதை வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in