Published : 04 Oct 2021 03:12 AM
Last Updated : 04 Oct 2021 03:12 AM

நெல்லை, தென்காசி, குமரியில் மிதமான மழை :

திருநெல்வேலியில் நேற்று மாலையில் கருமேகங்கள் திரண்டு பெரும்மழைக்கான அறிகுறி தென்பட்டது. ஆனால் தூறலுடன் மழை நின்று மக்களுக்கு ஏமாற்றம் அளித்தது. படம்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி/தென்காசி/ நாகர்கோவில்

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக ராதாபுரத்தில் 58 மி.மீ. மழை பதிவானது. மூலக்கரைப்பட்டியில் 55 மி.மீ., நம்பியாறு அணையில் 40, சேரன்மகாதேவியில் 37, அம்பா சமுத்திரத்தில் 35, கொடுமுடியாறு அணையில் 25, நாங்குநேரியில் 15, களக்காட்டில் 10.60, சேர்வலாறு, பாளையங்கோட்டையில் தலா 5, பாபநாசத்தில் 2, மணிமுத்தாறில் 1 மி.மீ. மழை பதிவானது.

பாபநாசம் அணைக்கு விநாடி க்கு 646 கனஅடி நீர் வந்தது. 505 கனஅடி நீர் வெளியேற்றப்பட்து. நீர்மட்டம் 86.80 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 64 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. நீர்மட்டம் 63.65 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 99.74 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 16.65 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 10.43 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 10 அடியாகவும் இருந்தது.

இதேபோல், தென்காசி மாவட்டத்திலும் மழை பெய்தது. சிவகிரியில் 32 மி.மீ., ஆய்க்குடியில் 13, தென்காசியில் 7.60, குண்டாறு அணையில் 5, கடனாநதி அணை, ராமநதி அணை, செங்கோட்டையில் தலா 3, அடவிநயினார் அணையில் 2 மி.மீ. மழை பதிவானது.

கடனாநதி அணை நீர்மட்டம் 62.50 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 56.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 52.50 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 124.75 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் இருந்தது.

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக நாகர்கோவிலில் 72 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. பெருஞ்சாணியில் 12 மிமீ., மாம்பழத்துறையாறில் 31, நிலப்பாறையில் 21, ஆனைக்கிடங்கில் 37, கோழிப்போர் விளையில் 12, புத்தன்அணையில் 11, கன்னிமாரில் 33, மயிலாடியில் 22, கொட்டாரத்தில் 42, சுருளோட் டில் 13 மிமீ., மழை பதிவானது.

நேற்று பகலில் மழை நின்ற நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. நீர்மட்டம் 43 அடியாக உள்ளது. 827 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. அணையில் இருந்து 378 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 66 அடியாக உள்ள நிலையில் விநாடிக்கு 725 கனஅடி தண்ணீர் வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x