

சாத்தான்குளம் அருகே உள்ள நரையன்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் செ.ஜெயக்குமார்(55). கூலித் தொழிலாளியான இவரது மனைவி கலா(50). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள னர். தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஜெயக் குமார் சென்னையில் தங்கி வேலை செய்துவந்தார்.
நேற்று முன்தினம் ஊருக்கு வந்துள்ளார். மது போதையில் இருந்த அவரை மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. வீட்டுக்கு வெளியே நின்றபடி தகராறு செய்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் தட்டார் மடம் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீஸார் அங்கு வந்து ஜெயக்குமாரை எச்சரித்து அனுப்பி வைத்துள் ளனர். ஆனால், ஜெயக்குமார் இரவு 10 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளார்.
இதனால் கலா மற்றும் அவரது மகள்கள் சேர்ந்து ஜெயக்குமாரின் கை மற்றும் கால்களை துணியால் கட்டி, வீட்டுக்கு முன்பிருந்த வேப்ப மரத்தில் கட்டிபோட்டுவிட்டு தூங்கச் சென்றுவிட்டனர். நேற்று காலையில் பார்த்தபோது ஜெயக்குமார் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கீழே விழுந்ததில் பின் தலையில் அடிபட்டு அவர் இறந்திருக்கலாம் என, போலீஸார் கருதுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.