

காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களுக்கு வரும் யாத்ரீகர்கள் தங்குவதற்கு இலவச தர்ம சத்திரம் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வருகிறது.
தேவராஜ் நகரில் உள்ள குஜராத் தர்ம சத்திரத்துக்கு பின்னால் இந்து தர்ம சந்திரம் என்றபெயரில் இந்த சத்திரம் இயங்கிவருகிறது. இங்கு இரு ஏ.சி. அறைகள் மற்றும் 60 பேர் தங்கும் வகையில் ஹால் ஒன்றும் உள்ளது. இங்கு பக்தர்கள் தங்குவதற்கு முற்றிலும் இலவசம்.
இங்கு தங்கும் பக்தர்களுக்கு மினரல் வாட்டர், பாத்திரம், சமையல் செய்ய இலவச கேஸ் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. சமையலுக்கு தேவையான பொருட்களை பக்தர்களே வாங்கிக் கொள்ள வேண்டும். தனியார் நிறுவனத்தில் முதுநிலை பொறியாளராக பணியும் கே.தட்சிணாமூர்த்தி இதனை நிர்வகித்து வருகிறார்.
காஞ்சிபுரம் கோயிலுக்கு வந்து இலவசமாக தங்க விரும்புவோர் 99407 64667 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள் 20 பேர் தங்குவதற்கும் இந்த சத்திரத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.