வாக்காளர்கள் பெயர் நீக்கம் விழுப்புரம் ஆட்சியரிடம் இந்திய கம்யூ. மனு :

விழுப்புரம் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த இந்தியகம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் கிராம மக்கள்.
விழுப்புரம் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த இந்தியகம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் கிராம மக்கள்.
Updated on
1 min read

ஈச்சங்குப்பத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் வாக்களிக்க உத்தரவிடுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சிய ரிடம் மனு அளித்தனர்.

விழுப்புரம் அருகே ஈச்சங்குப்பத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற் பட்ட கிராம மக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர்நீக்கம் செய்யப் பட்டதை கண்டித்து, கடந்த 30-ம்தேதி ஆட்சியர் அலுவலகம் முன்புதர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களிடம் வருவாய்கோட்டாட்சியர் ஹரிதாஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, எங்கள் ஊராட்சிஎல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 80 வாக்காளர் பெயர்களை நீக்கம் செய்தும், புதிதாக தகுதியற்ற, வயதுவரம்பு இல்லாத மற்றும் எங்கள் ஊராட்சி பகுதிக்கு சம்பந்தமில்லாத புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைத் துள்ளனர் என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பி னர் ஏ.வி.சரவணன், கலியமூர்த்தி உள்ளிட்டோர் ஆட்சியரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பது:

17 பள்ளி மாணவ, மாணவிகள் பெயர்கள் வாக்களர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் கிராமத்தில் வசிக்கும் 31 நபர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. எனவே 31.8.2021-ம் தேதி வெளியான வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவரும் வாக்களிக்க உத்தரவிடவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in