

தேனி அருகே மாணிக்காபுரத்தை சேர்ந்த தம்பதி முருகன், மலர்விழி (36). குடும்பப் பிரச்சினையால் 3 ஆண்டுகளாக பிரிந்திருந்தனர்.முருகன் சென்னையில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார்.
இவர்களது மகன் மதன்குமார் (18) சென்னையில் பணிபுரிந்துவிட்டு ஊர் திரும்பி னார். தனது தந்தை மறுமணம் செய்துள்ளது குறித்து தாயிடம் புலம்பினார். இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்தார். வீரபாண்டி எஸ்ஐ ஏ.வரதராஜன் விசாரிக்கிறார்.