Published : 02 Oct 2021 06:40 AM
Last Updated : 02 Oct 2021 06:40 AM

காமாட்சி அம்மன் கோயில் : நவராத்திரி விழா அக். 5-ல் தொடக்கம் :

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் காரியம் சுந்தரேச அய்யர் கூறியது:

காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா அக். 5-ம் தேதியில் இருந்து 17-ம் தேதி வரைநடைபெறுகிறது.

அக். 13-ம் தேதி காமாட்சி அம்மனுடன் துர்கா தேவியும் புறப்பாடாகி வன்னி மரத்தில் அம்பு எய்தி சூரசம்ஹாரம் நிறைவு பெறுகிறது. அக். 15-ம் தேதி கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி, அக். 17-ம் தேதி அம்மன் ஊஞ்சல் உற்சவத்தோடு விழாநிகழ்ச்சிகள் நிறைவு பெறும். கரோனா அச்சுறுத்தல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x