Published : 02 Oct 2021 06:41 AM
Last Updated : 02 Oct 2021 06:41 AM

பேருந்து உரிய நேரத்தில் வராததால் பள்ளிக்கு தாமதமாக வந்த - மாணவ- மாணவிகளை பிரம்பால் அடித்ததாக தலைமை ஆசிரியர் மீது புகார் : மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் சு.ஆடுதுறை யில் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரிய ராக பணிபுரிந்து வருபவர் வண்டார் குழலி. இவர், பள்ளி யில் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவிகளை அவமதிப்பதுபோல நடந்து கொள்வதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லரிடம் ஊராட்சி மன்றத் தலைவர், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஓரிரு வாரங்க ளுக்கு முன்பு புகார் அளித்தி ருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சு.ஆடு துறைக்கு வரும் அரசுப் பேருந்து உரிய நேரத்தில் வந்துசேராததால், அதில் வந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு சற்று தாமதமாக வந்தனர். இதைக் கண்ட பள்ளித் தலைமையாசிரியர் வண்டார்குழலி தாமதமாக வந்த மாணவ - மாணவிகளை வரிசையாக நிற்கவைத்து, பிரம்பால் சரமாரியாக அடித் ததாகவும், இதனால், வலி தாங்க முடியாமல் மாணவ - மாணவிகள் பலர் கதறி அழுததாகவும் கூறப்படு கிறது.

இதையறிந்த பெற்றோர், மாணவிகளை பிரம்பால் அடித்த தலைமை ஆசிரி யர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகனிடம் நேற்று முன்தினம் மாலை புகார் அளித்தனர். இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில், தலைமை ஆசிரியர் வண்டார் குழலியை விசாரணைக்காக மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு மாவட்டக் கல்வி அலுவலர் குழந்தை ராஜன் வரவழைத்து நேற்று விசாரணை நடத்தினார். பின்னர், பள்ளிக்கும் சென்று ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள் மற்றும் பெற்றோ ரிடம் விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படை யில், பள்ளித் தலைமை ஆசிரியர் மீது உடன டியாக நடவடிக்கை எடுக்கப் படவுள்ளது என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x