Published : 01 Oct 2021 03:19 AM
Last Updated : 01 Oct 2021 03:19 AM

காங்கிரஸில் ‘தற்காலிகத் தலைவர்’ என்பது தொழில்நுட்ப வார்த்தை : கபில்சிபலின் விமர்சனத்துக்கு கே.எஸ்.அழகிரி பதில்

விழுப்புரம்

காங்கிரஸூக்கு செல்வாக்கு அதிகமுள்ள மாநிலங்களில் அக்கட்சிக்குள் குழப்பம் அதிகரித்து வருகிறது. பஞ்சாப்பில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியி ருக்கிறார்.

இந்தச் சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், “காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு யார் தலைவர் என்றே தெரியவில்லை. தற்காலிக தலைவரே இருக்கிறார். இன்னமும் உட்கட்சித் தேர்தல் நடத்தி, தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை” என்றுகட்சித் தலைமையை விமர்சித் துள்ளார்.

இந்நிலையில், விழுப்புரம் மத்தியமாவட்ட காங்கிரஸ் சார்பில் உள் ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று விழுப்புரத்தில் மாவட்டத் தலைவர் சீனிவாசகுமார் தலை மையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களிடம் கூறியது:

சோனியா மற்றும் ராகுலே காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள். தொண்டர்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்கள் இவர்கள் தான். இதில், ‘தற்காலிக தலைவர்’ என்பது தொழில்நுட்ப வார்த்தை. அகில இந்திய காங்கிரஸ் தலைமை கூடி அறிவிக்கும் வரை ‘தற்காலிகம்’ என்ற வார்த்தை நீடிக்கும். ‘தற்காலிக தலைவர்’ என் பது அறிவார்ந்த செயல் அல்ல.

தமிழகத்தில் காங்கிரஸ் தலை வராக சி.சுப்பிரமணியமும், பா. ராம சந்திரனும் இருந்தாலும் காமரா ஜரைதான் மக்கள் தலைவராக ஏற்றுக் கொண்டார்கள். அந்த வரிசை யில் பார்த்தால் சோனியாவும், ராகுலும்தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள்.

கபில் சிபில் அமைச்சராக இருந்த வர். இதனை தனிப்பட்ட முறையில் அவர் சொல்லி இருக்கலாம். இவரால்சோனியாவிடம் பேசமுடியும். இதை பொது வெளியில் சொல்வதுபாஜகவின் ஆசையை நிறைவேற்று வதாகும். காங்கிரஸில் உள்ள பாஜக வினர் சொல்வதாகத்தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனைதமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல் பேச்சுவார்த் தையில் கூட்டணியில் விரும்பும் அளவுக்கு யாருக்கும் கிடைக்காது. குறைபாடு எல்லோர் மனதிலும் உள்ளது. பேச்சுவார்த்தை முடிவுக்குப் பின் அதைப்பற்றி பேசக்கூடாது. ஏற்றுக்கொண்டதால் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக செஞ்சி அருகே அப்பம்பட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலை மையில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ‘உதயமாகும் வெற்றி கை’ என்ற குறுந்தகட்டை மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x