வேளாண்மைத்துறை அலுவலக வளாகத்தில் பனை மர விதைகள் நடவு :

வேளாண்மைத்துறை அலுவலக  வளாகத்தில் பனை மர விதைகள் நடவு :
Updated on
1 min read

தூத்துக்குடி மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் மாவட்டத்தில் ஒரு கோடி பனை மர விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக பனை விதைகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக மாவட்ட வேளாண்மை துறை அலுவலக வளாகத்தில் பனை மர விதைகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் எஸ்.ஜே.கென்னடி தலைமை வகித்தார். தூத்துக்குடி அட்மா திட்ட வேளாண்மை இணை இயக்குநர் க.ஜெய செல்வின் இன்பராஜ் முன்னிலை வகித்தார்.

மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் பனை மர விதைகளை நடவு செய்து, பணிகளை தொடங்கி வைத்தார். அலுவலக வளாகத்தைச் சுற்றி 220 பனை மர விதைகள் நடவு செய்யப்பட்டன. மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ்.பானுமதி நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in