மீனவ விதவை பெண்களுக்கு உதவி :

மீனவ விதவை பெண்களுக்கு உதவி :
Updated on
1 min read

மதுரை வேளாண்மைக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வளாகத்தில் வைத்து மீனவ சமுதாயத்தை சேர்ந்த 15 விதவை பெண்களுக்கு மீன்களை சுமந்து செல்வதற்கான அலுமினிய பாத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்க பிரதிநிதியும், ஓய்வு பெற்ற மீன்வளத்துறை துணை இயக்குநருமான பா. ஐசக் ஜெயக்குமார் தலைமை வகித்து பாத்திரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தூத்துக்குடி மண்டல இணை இயக்குநர் இரா.அமல்சேவியர், உதவி இயக்குநர் தி.விஜயராகவன், ஆய்வாளர்கள் ஜெகன் மற்றும் மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in