ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் - 2 ஆண்டுகளில் 23,151 பேருக்கு சிகிச்சை :

ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் -  2 ஆண்டுகளில் 23,151 பேருக்கு சிகிச்சை :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் விழிப் புணர்வு வார விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரமத மந்திரி மக்கள் ஆரோக்ய திட்டத்தின் மூலம் தூத்துக்குடி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் 9 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு மக்களுக்கு சேவை புரிந்து வருகின்றன.

ரூ. 4 கோடியில் சிகிச்சை

கரோனா பெருந்தொற்று காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏழை, எளிய மக்கள் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வர முதலவரின் ஆணைக்கு இணங்க தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் 365 பேருக்கு ரூ.4 கோடி செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் முருகவேல், துணை இயக்குநர் (குடும்ப நலம்) பொன் இசக்கி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பொற்செல்வன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு, மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், மாவட்ட திட்ட அலுவலர் (காப்பீடு) சுந்தரமூர்த்தி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in