உடன்குடியில் - முன்னாள் போலீஸ்காரர் மனைவி கொலை : கணவர் தற்கொலை செய்த நாளில் பரிதாபம்

உடன்குடியில்  -  முன்னாள் போலீஸ்காரர் மனைவி கொலை  :  கணவர் தற்கொலை செய்த நாளில் பரிதாபம்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் காவல்துறை தனிப்பிரிவு முன்னாள் போலீஸ்காரர் மனைவி குத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மருமகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

உடன்குடி பிள்ளையார் பெரியவன்தட்டைச் சேர்ந்தவர் செல்வமுருகன். திருச்செந்தூரில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த இவர், குடும்ப பிரச்சினையால் கடந்தஆண்டு செப். 30-ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்தார் இவரது மனைவி அருணா (40). இவர்களுக்கு 20 மற்றும் 10 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன்சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டும்,இளைய மகன் இங்குள்ள பள்ளியொன்றில் 5 -ம் வகுப்பும் படிக்கின்றனர். அருணா மகன்களுடன்பிள்ளையார் பெரியவன்தட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் செல்வமுருகனின் அக்காள்ராசம்மாளின் மகன் முத்துகுமார் (35) என்பவர் அருணாவின்வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதுஅருணா, தனது தாயார் வேலம்மாள் மற்றும் 2-வது மகனுடன்பேசிக் கொண்டிருந்தார். முத்துகுமார் தனது அத்தையிடம் தனியாக பேச வேண்டும் என்பதால் வேலம்மாளை பேரனுடன்கொஞ்ச நேரம்வெளியே நிற்குமாறு தெரிவித்துள்ளார். பின்னர் தனது மாமா செல்வமுருகன் மரணத்துக்கு அருணா தான் காரணம் எனக் கூறி அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே அருணா கத்தியால் குத்தப்பட்டார். அருணாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வரவே முத்துக்குமார் தப்பி ஓடிவிட்டார். சிறிது நேரத்தில் அருணா இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் குலசேகரன்பட்டினம் காவல்ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையில் போலீஸார் அங்கு வந்து அருணாவின் உடலைக் கைப்பற்றி விசாரித்தனர். திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம்உடன்குடி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in