பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை -  சிறப்பு டிஜிபி, எஸ்பி விழுப்புரம் நடுவர் மன்றத்தில் ஆஜர் :

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை - சிறப்பு டிஜிபி, எஸ்பி விழுப்புரம் நடுவர் மன்றத்தில் ஆஜர் :

Published on

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி நீதிமன்றத்தில் ஆஜராயினர்.

தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி, கடந்த பிப்ரவரி மாதம்21-ம் தேதி டெல்டா மாவட்டங் களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண்ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த புகார் தொடர்பாக சிறப்பு டிஜிபி மற்றும் அவரது உத்தரவின்படி பெண்ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டுமாவட்ட முன்னாள் எஸ்பி ஆகி யோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துவிழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த னர். இவ்வழக்கு விசாரணை விழுப் புரம் தலைமை குற்றவியல் நீதி மன்றத்தில் கடந்த ஆகஸ்டு மாதம்9-ம் தேதி தொடங்கி நடந்து வரு கிறது. இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு டிஜிபி, செங்கல் பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் ஆஜராயினர். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கு விசாரணையை வருகிற 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நடுவர் கோபிநாதன் உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in