திருநெல்வேலி சந்திப்பில் அரவிந்த் கண் மருத்துவமனை முன்பிருந்த பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டது குறித்து, அங்கு வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பதாகை. படம்: மு.லெட்சுமி அருண்
Regional02
நெல்லை சந்திப்பில் பேருந்து நிறுத்தம் திடீர் மாற்றம் :
திருநெல்வேலி சந்திப்பில் அரவிந்த் கண் மருத்துவமனை முன்பிருந்த பேருந்து நிறுத்தம் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென்று மாற்றப்பட்டதால் முதியோர், பெண்கள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
திருநெல்வேலி சந்திப்பில் அரவிந்த் கண் மருத்துவமனை முன் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பேருந்து நிறுத்தம் நேற்று முதல் கொக்கிரகுளத்துக்கு மாற்றப்பட்டது.
முன்னறிவிப்பு இல்லாமல் போக்குவரத்து போலீஸார் மேற்கொண்ட இந்த நடவடிக்கை குறித்துஅப்பகுதியில் சிறிய பதாகை மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டதால் மருத்துவமனைக்கு வரும்நோயாளிகளும், மருத்துவமனையிலிருந்து செல்லும் நோயாளிகளும், பெண்களும், முதியவர்களும் சுட்டெரித்த வெயிலில் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை கடந்துகொக்கிரகுளத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
