நெல் கொள்முதல் நிலையங்களில் : விற்பனை செய்ய இணையத்தில் பதிவு :

நெல் கொள்முதல் நிலையங்களில் : விற்பனை செய்ய இணையத்தில் பதிவு  :
Updated on
1 min read

விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல்லை விற்பனை செய்ய இணையத்தில் பதிவு செய்யலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்: தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று, தமிழ்நாடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்து கொண்டு, நெல் விற்பனை செய்ய ஏதுவாக ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள e-DPC இணையத்தில் எதிர்வரும் கொள்முதல் பருவம் 2021-2022-ல் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய இணையதளங்களிலும் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட முதுநிலை மண்டல மோலாளர் அலுலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in