

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் ஆனந்த்(36). இவர் நேற்று முன்தினம் இரவு கீழக்கரை அருகே செங்கல்நீரோடையில் உள்ள தனது தோப்புக்குச் சென்றுவிட்டு குடும்பத்துடன் காரில் ராமநாதபுரம் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மேலவலசை அருகே நாய் குறுக்கிட்டதால் மருத்துவர் ஆனந்த் காரை நிறுத்தினார். திடீரென அங்கு வந்த 2 பேர் மருத்துவரிடம் தகராறு செய்தனர். அதைத் தொடர்ந்து அங்கு வந்த 20 பேர் மருத்துவர் ஆனந்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். 15 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். கீழக்கரை காவல் நிலையத்தில் மருத்துவர் புகார் அளித்தார். மேலவலசையைச் சேர்ந்த 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.