உலக சுற்றுலா தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு :

கிருஷ்ணகிரியில் உலக சுற்றுலா தினத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிஇஓ மகேஸ்வரி பரிசு வழங்கினார்.
கிருஷ்ணகிரியில் உலக சுற்றுலா தினத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிஇஓ மகேஸ்வரி பரிசு வழங்கினார்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் உலக சுற்றுலா தினத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிஇஓ பரிசு வழங்கினார்.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், உலக சுற்றுலா தினத்தையொட்டி மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் கஜேந்திரகுமார், உதவி சுற்றுலாத்துறை அலுவலர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் மாணவிகள் பங்கேற்ற கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, நடனப் போட்டி மற்றும் இணையவழி கருத்தரங்கம் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட கல்வி அலுவலர்கள் கிருஷ்ணகிரி கலாவதி, ஓசூர் ராஜேந்திரன், தேன் கனிக்கோட்டை ஜோதிசந்திரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகரன், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் மகேந்திரன், மற்றும் ஆசிரியர் ரமேஷ், ஆசிரியைகள் விஜயலட்சுமி, அனுசுயாபாய், பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in