Regional02
2020-21-ம் ஆண்டில் குறுவை நெற்பயிருக்கு ரூ.17.35 கோடி பயிர்க் காப்பீடு இழப்பீடு :
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2020-21-ம் ஆண்டில், திருவாரூர் மாவட்டத்தில் குறுவை நெற்பயிரைக் காப்பீடு செய்ய 44,600 விவசாயிகள் பதிவு செய்தனர். அதன்படி, 49,796 ஏக்கர் குறுவை நெற்பரப்பு காப்பீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், பயிர் அறுவடை பரிசோதனை முடிவுகளின்படி, தகுதிவாய்ந்த 297 கிராமங்களில் பயிர் இழப்புக்கேற்ப 31,033 ஏக்கருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, இதுவரை 24,901 விவசாயிகளுக்குரிய ரூ.17 கோடியே 35 லட்சத்து 92 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
