

விருதுநகரில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி, இறக்குமதி வழி காட்டிக் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கருத்தரங்கில் ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி பேசிய தாவது: பொருளாதார வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் “ஏற்றுமதியாளர் சங்கமம்” என்ற நிகழ்ச்சியை மாவட்டம்தோறும் நடத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இக்கருத்தரங்கின் நோக்கம் மாவட்டத்தில் உள்ள ஏற்றுமதியாளர்கள், தொழில் முனைவோர், அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள் ஆகியோரை ஒரு குடையின் கீழ் சங்கமித்து மாவட்டத்தின் தொழில் வளம், ஏற்றுமதி வாய்ப்புகள், ஏற்றுமதியாளர் சந்திக்கும் பிரச்சினைகள், நிதி ஆதாரம் பெறுவதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து ஆலோசித்து மாவட்டத் தின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி திறன்களை மேம்படுத்துவதே ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.