Published : 27 Sep 2021 03:21 AM
Last Updated : 27 Sep 2021 03:21 AM

அமெரிக்காவுக்கு 22 டன் தேங்காய் ஏற்றுமதி : இயற்கை முறையில் விளைவிக்கப்படுவதால் வரவேற்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அமெரிக்காவுக்கு இயற்கைமுறையில் விளைந்த 22 டன் தேங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி வட்டாரம், கோட்டத் துறை கிராமத்தைச்சேர்ந்த விவசாயி மோகன்குமார் தமிழ்நாடு அரசு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறையில் தனது 29 ஏக்கரில் 19 ஏக்கர் தென்னையும், 10 ஏக்கர் நெல்லியும் பயிரிட்டு பதிவு செய்துள்ளார்.

இவரது வயலில் இயற்கை முறையில் (ஆர்கானிக்) விளை விக்கப்பட்ட தேங்காயை அறுவடை செய்த பிறகு ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டது. இதில் தேங்காயை ஏற்றுமதி செய்ய பரிவர்த்தனைச் சான்று வழங்கப் பட்டது. இதனால் இவர் கடந்த 6 மாதத்தில் 22 டன் தேங்காயை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய் துள்ளார். இதன்மூலம் இவருக்கு 50 சதவீதம் கூடுதல் லாபம் கிடைத் துள்ளது. மேலும் மாவட்டத்தில் முருங்கை, கொய்யா, மா, காபி, மிளகு மற்றும் கொடைக்கானல் மலைப்பூண்டு ஆகியவற்றை இயற்கை முறையில் விளைவித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து திண்டுக்கல் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சு.வரதராஜன் கூறியதாவது: இயற்கை வேளாண்மையில் ஈடு பட்டுள்ளோர் அங்ககச்சான்று பெற தனிநபராகவோ அல்லது 25 முதல் 500 நபர்கள் கொண்ட குழுவாகவோ அல்லது வணிக நிறுவனமாகவோ பதியலாம். மேலும் விவரம் அறிய மொபைல் எண் 94438 32741-ஐ தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x