திருச்சி எஸ்.ஆர்.எம் ‘கேம்பஸ் ரன் - 2021’ :

திருச்சி எஸ்.ஆர்.எம் ‘கேம்பஸ் ரன் - 2021’ :
Updated on
1 min read

திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் திருச்சி வளாகத்திலுள்ள அனைத்து கல்லூரிகளும் இணைந்து எஸ்.ஆர்.எம் திருச்சி கேம்பஸ் ரன்-2021 என்ற மிகப்பெரிய மாரத்தான் ஓட்டத்தை நேற்று நடத்தின. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் (திருச்சி மற்றும் ராமாபுரம்) டாக்டர் ஆர்.சிவகுமார், எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி தலைவர் எஸ்.நிரஞ்சன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

‘‘சமுதாயத்துக்கு நாம் ஒவ்வொருவரும் உதவ வேண்டும், நம்மை நாம் உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும்’’ என மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்த மாரத்தான் நிகழ்ச்சியில் அனைத்து கல்லூரிகளைச் சார்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பிரபல நடிகரும், தயாரிப்பாளரும், சமூக ஆர்வலருமான சவுந்தரராஜா பேசும்போது, ‘‘இதை ஒரு நிகழ்வாக மட்டும் கடந்து செல்லாமல், ஒவ்வொருவரும் நம் மண்ணுக்கும் மக்களுக்கும் பயனுள்ளதாக வாழ்வதே வாழ்க்கை’’ என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் திருச்சி வளாகத்தின் செயல் இயக்குநர் டாக்டர் எஸ்.ரகுபதி, இணை இயக்குநர் டாக்டர் என்.பாலசுப்ரமணியன் ஆகியோர் பேசினர். மருத்துவமனையின் டீன் டாக்டர் ரேவதி வரவேற்றார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in