

ஆண்டுதோறும் அக்டோபர் 4-ம் தேதி உலக வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலக வனவிலங்கு நாளை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், குருத்து குழந்தைகள் அமைப்பு சார்பில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ‘எனக்கு பிடித்த வன விலங்கு’ என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தப்படுகிறது. 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ‘எனக்கு பிடித்த வனவிலங்கு’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது. 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ‘ஏன் வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும்?’ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது.
இந்த போட்டிகள் அக்டோபர் 4-ம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும். போட்டியில் வரைவதற்கு தேவையான தாள்கள் அருங்காட்சியகத்தில் வழங்கப்படும். மாணவர்கள் தங்களுக்கு தேவையான அட்டை, எழுது பொருட்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
மாணவர்கள் தங்களின் பெயர்களை கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கும், முன்பதிவுக்கும் 9629487873 என்கிற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தெரிவித்துள்ளார்.