கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் - 2,314 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம் :

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் -  2,314 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம் :
Updated on
1 min read

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 2,314 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அரு கில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பால சுப்ரமணியம் தலைமையில் நேற்றுஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பேசுகை யில், ‘‘கடலூர் மாவட்டத்தில் இன்று (செப். 26) நடைபெற உள்ள 3-வது மாபெரும் தடுப்பூசி முகாமில் விடுபட்ட மற்றும் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள் ளிட்ட அனைவரும் இணைந்து 100சதவீத இலக்கினை அடைய நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் "என்றார்.

மாவட்ட ஆட்சியரின் நேர் முகஉதவியாளர் (சத்துணவு) தமிழ்ச்செல்வி, மகளிர் திட்ட இயக்குநர் செந்தில்வடிவு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (புவனகிரி) சுந்தரம்,ராஜசேகரன், வட்டார வளர;ச்சி அலுவலரகள் (கீரப்பாளையம்) ரவிச்சந்திரன், னிவாசன், வட்டார மருத்துவ அலுவலர் (புவ னகிரி) சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் (கீரப்பாளையம்) சிபி, உள்ளாட்சி பிரதிநிதிகள் , சுயஉதவிக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 71 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடும் வகையில் இன்று 784 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் மோகன் தெரி வித்துள்ளார்.

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 423 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in